Visitors

Website counter

Sunday, January 31, 2010

சுஹாசினியின் திமிர்

நேற்று ஹாசினியின் பேசும் படத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பற்றி சுஹாசினி விமர்சனம் செய்தார். முடிவில் பேசியது தான் எனக்கு வயிற்றிசலை ஏற்படுத்தியது." நெறைய பேர் 2 ண்டு ஆஃப் படம் புரியேலெனு சொல்லரங்க, கத தான் பேப்பர்ல விரிவா போட்டு இருக்கு, பேப்பர் படிக்குனும் நல்ல, அப்பறம் சிலபேர் 35 கோடி செலவு பண்ணியிருக்காங்க வேஸ்டுனு சொல்லுறங்க. 25 ரூபா படம் பாக்கர நீங்க அத பத்தி கவலபட தேவ இல்லை".

அப்பறம் எதுக்கு தியட்டார்ல படம் போயி பாக்கணும் பேசாம எல்லா படத்தையும் பேப்பரல்ல போட்டுடுங்க, அப்பறம் அம்மணி நாங்க காசு குடுத்து பக்கலன நீங்க எப்படி படம் எடுக்க முடியும் இல்லன எங்களுக்கு ஓசி டிக்கெட் குடுங்க நாங்க எதுவும் பேசமாட்டோம். நீங்க படம் எடுக்கரதே எங்களுடைய வரி பணம் Mind It.

Monday, January 25, 2010

ராசா

பிப்ரவரியில் 3ஜி ஏலம் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 25,000 கோடி கிடைக்கும் – ராசா
இதுல உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் அத்த மொதல்ல சொல்லுங்குக

Friday, January 22, 2010

A.R. ரகுமான் சார் ஒரு கேள்வி?

AR ரகுமான் சார் ஆஸ்தேரிலியா உள்ள பணக்கார இந்தியர்களுக்காக பாட்டு எல்லாம் பாடுரீங்க அரசாங்கத்துக்கு இந்தியர்களை அடிக்கத்ீங்கனு கெஞ்சி கேக்குறீங்கஏன் சார் தமிழ்நாடுள்ள அப்பாவி தமிழர்கள் நாம ருசிய சாப்பாரூதுக்காக கடல் போயி இலங்கை ராணுவத்தால் சுட்டு செத்து போறாங்களே அத்த மட்டும் ஏன்சார் நம்ம அரசாங்கத்துக்கிட்ட கேக்க மாட்டுரிங்க?

Thursday, January 21, 2010

NOKIA பல்டி

காஞ்சி சங்கரமட மேலாளர் சங்கர் ராமன் கொலை வழக்கில் நேற்று 7 சாட்சிகள் 'பல்டி' மொத்தம் 19 சாட்சிகள் பல்டி.
இப்படி பல்டி அடிக்கறங்களே இவங்களுக்கு 'அடி' விழதா?

நோக்கியாவில் மேலும் 22 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
NOKIA THE dis CONNECTING PEOPLE

Wednesday, January 20, 2010

சூர்யா

சூர்யாவின் தி.நகர் வீட்டில் கிலோ கணக்கில் நகைகள் கிடைத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

சார், சார் அது அத்தனையும் கவரிங் நக சார்

Tuesday, January 19, 2010

இல. கணேசன் பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற காங்கிரஸ்சால் மட்டுமே முடியும் - பிரதமர் மன்மோகன்சிங் இந்த விஷயம் முதல்வர் கருணாநிகுத் தெரியுமா?? பாஜகவில் வேஷ்ட்டி கிழிப்பு, முற்றுகை போராட்டம் எல்லாம் எல்லை-இல.கணேசன் ரெட்டி சகோதர்கள் மாதிரி மிரட்டல் போராட்டம்தான் உண்டோ? வெளிநாட்டு பல்கலைக் கழக்கங்களை அனுமதிக்கப் புதிய கட்டுப்பாட்டைக் கொண்டு வருவோம் - மத்திய அரசு அவங்க கட்டுப்பாட்டுக்குள்ள போற வரைக்கும் தான் இதில்லாம்

மராத்தி மொழியில் தான் பேச வேண்டும்

வரும் பிப்ரவரி 27ம் தேதி மராத்தி மொழி தினம் அனுசரிக்கப்படுகிறது। இதையொட்டி மக்கள் அனைவரும் மராத்தி மொழியிலேயே பேச வேண்டும் என வலியுறுத்தி ராஜ் தாக்கரே எழுதியுள்ள கடிதத்தை மாநிலம் முழுவதும் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா। மகாராஷ்டிர மக்கள் அலுவலகம், வீடு, ரயில், பஸ், கடைத்தெரு என எங்கு சென்றாலும் மராத்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என அக்கடிதத்தில் ராஜ் தாக்கரே வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.- செய்தி

ஐயா, அப்படியே மகாராஷ்டிர மக்கள் வேறு நாட்டிற்கோ அல்லது மற்ற மாநிலங்களுக்கு சென்றால் என்ன மொழி பேசவேண்டும் என்பதையும் தாங்கள் சொன்னால் நன்றாக இருக்கும், இல்லை அங்கேயும் உங்கள் மொழி தான் பேசவேண்டமா? அப்படியே நீங்கள் பேச சொன்னால் எதிரே உள்ளவருக்கு எப்படி புரியும். அவன் எங்களை லூசு என்று நினைக்க மாட்டானா? நீங்கள் தான் பேச சொன்னீர்கள் என்று சொன்னால் உங்களையும் லூசு என்று நினைக்க மாட்டானா? ஒன்றும் புரியவில்லை தலைவரே